தமிழகம் வந்து சேர்ந்தது! ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்!

12 June 2020 அரசியல்
corona2ndcovid19.jpg

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், இதன் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தற்பொழுது வரையிலும், தமிழகத்தில் 36841 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 326 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர்.

இந்த வைரஸ் பாதிப்பினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். இந்த நோய்க்கு பயன்படுத்தப்படும் பிசிஆர் கருவிகள் பற்றியப் புகாரினை, சமீபத்தில் திமுக தலைவர் முகஸ்டாலின் முன் வைத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்திற்குத் தேவையான பிசிஆர் கருவிகள் கையிருப்பில் இருப்பதாகவும், மேலும் ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறினார். இந்நிலையில், வாரவாரம் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவின் தனியார் நிறுவனத்திடம் இருந்து, புதிய கருவிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாரமும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. இதனை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் கழகம் தெரிவித்துள்ளது. இதனால், நோயாளிகளுக்கு தேவையான சோதனைகளை, எவ்வித தங்கு தடையுமின்றி செய்ய இயலும் என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS