இந்தியாவில் ஒரு லட்சம் பேர் குணமாகினர்! பலி விகிதமும் குறைய ஆரம்பித்தது!

06 June 2020 அரசியல்
coronaspain.jpg

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில், ஒரு லட்சம் பேர் தற்பொழுது குணமாகி உள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கானது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவும் வேகமானது குறைந்தபாடில்லை. தொடர்ந்து, அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த 15 நாட்களில் இரண்டு மடங்கு கூடுதல் வேகத்துடன் பரவி இருக்கின்றது.

தற்பொழுது வரை இந்தியா முழுவதும் இந்த கொரோனா வைரஸால், சுமார் 2,26,770 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸால் சுமார் 6348 பேர் பலியாகி உள்ளனர். இந்த நோய்க்கு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,10,960 ஆகும். அதே போல், இந்த வைரஸ் தொற்றுக் குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை சுமார், 1,09,462 பேர் ஆகும்.

இந்தியாவில் தற்பொழுது குணமாகும் விகிதம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இருப்பினும், கொரோனா பரவும் வேகமும் அதிக வேகமாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 9851 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போல், 273 பேர் ஒரே நாளில் மரணமடைந்து உள்ளனர். மஹாராஷ்டிரா இதில் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளது.

இந்த வேகம் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள், இந்தியாவில் 50% அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS