அயோத்தி வழக்கு தீர்ப்பு! தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

09 November 2019 அரசியல்
edappadipalaniswami.jpg

இன்று காலை 10.30 மணிக்கு, உச்சநீதிமன்றம் கூடுகின்றது. அப்பொழுது, நீண்ட காலமாக, வழக்கில் உள்ள அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பினை கூற உள்ளது. இதற்காக, இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

எப்பொழுதும், மூன்று கட்டப் பாதுகாப்பானது, உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் காரணமாக, இன்று உச்சநீதிமன்றத்திற்கு ஐந்தடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அயோத்தி பகுதியில், தற்பொழுது 4,000 துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் விடுப்பில் சென்றிருந்த காவல்துறை பணியாளர்களுக்கு, விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து காவலர்களும் பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும், தமிழக அமைதியும், பொறுமையும் காக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HOT NEWS