வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தியா முழுவதும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தினை அமல்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இது குறித்த மசோதாவானது, கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதனை அமல்படுத்தும் முயற்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கையில், கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்ட காரணத்தால், அதனை அமல்படுத்தும் முயற்சியானது தாமதமானது.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது இது சாத்தியமாக உள்ளது. இது குறித்துப் பேசிய தமிழக அமைச்சர் காமராஜ் வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்றுக் கூறியுள்ளார்.