ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு! ஜூன் மாதத்திற்குள் அமல்படுத்த திட்டம்!

21 January 2020 அரசியல்
ramvilaspaswan11.jpg

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தினை, வருகின்ற ஜூன் மாதத்திற்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இருப்பவர்கள், ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு, வேலைக்காக இடம் பெயர்கின்றனர். இதனால், அவர்களால் அரசாங்கம் வழங்கும் ரேஷன் பொருட்களை வாங்க முடிவதில்லை. இதனால், அனைவருக்கும் பயன்படும் விதத்தில் நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்தது. இதனை மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம், அனைவருமே எங்கு வேண்டும் என்றாலும், தங்களுடைய ரேஷன் கார்டினைப் பயன்படுத்தி, ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இது பற்றி, பீகாரில் உள்ள பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஸ்வான், தற்பொழுது 12 மாநிலங்களில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில், வருகின்ற ஜூன் 1ம் தேதிக்குள் இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தினை அமல்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

HOT NEWS