சீனாவில் புதிதாக உருவாகியுள்ள ஹண்டா வைரஸ்! ஒருவர் பலி!

24 March 2020 அரசியல்
mouse.jpg

சீனாவில் இருந்து உலகம் முழுக்கப் பரவி உள்ள கொரோனா வைரஸானது, தற்பொழுது வரை 16,000க்கும் மேற்பட்டோரின் உயிரினைப் பறித்துள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து புதிய வைரஸ் ஒன்றுக் கிளம்பியுள்ளது.

ஹண்டா வைரஸ் எனப்படும் வைரஸானது, சீனாவில் இருந்து பரவத் தொடங்கியுள்ளதாக, க்ளோபல் நியூஸ்32 என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு உள்ள நபர், சீனாவின் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, மரணம் அடைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த ஹண்டா வைரஸானது, எலியின் திரவங்களில் பரவக் கூடியது ஆகும். எலியின், சிறுநீர், எச்சில், இரத்தம் உள்ளிட்டவைகளில் இருந்து இது பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த வைரஸானது, பெரும்பாலும் மனிதர்களிடையப் பரவாது. சிலி மற்றும் அர்ஜென்டினாவில் மட்டும், ஒரு சிலருக்கு மனிதர்கள் மூலம் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

மற்றபடி, இந்த வைரஸானது பெரிய அளவில் மனிதர்களிடம் பரவியதாக எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை. இதனை, அமெரிக்காவின் சுகாதார அமைப்பும் தெளிவுபடுத்தி உள்ளது.

HOT NEWS