ஒரு ஆசிரியர்! 25 பள்ளிகள்! 13 மாதங்களில் ஒரு கோடி வருமானம்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

06 June 2020 அரசியல்
schoolstudents.jpg

உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஒரு ஆசிரியர் அங்குள்ள 25 பள்ளிகளில் ஆசிரியர் பணி செய்து, வெறும் 13 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம், மெயின்புரி நகரில் உள்ள கஸ்தூரிபா காந்தி பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருப்பவர் அனாமிகா சுக்லா. இவர், அங்குள்ள 25 பள்ளிகளில் பணியாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாஜக உத்திரப் பிரதேசத்திற்கு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அந்த மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களின் தகவல்கள் அனைத்தும், டிஜிட்டல் டேட்டா பேசிற்கு மாற்றப்பட்டு வருகின்றது.

இந்த விஷயத்தால் தான், அனாமிக சுக்லா மாட்டிக் கொண்டுள்ளார். கடந்த 13 மாதங்களாக, சுமார் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அவர் பணியாற்றி இருப்பதாக வருகைப் பதிவேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மாதம் 30,000 சம்பளம் வாங்கும் சுக்லா, தன்னுடைய வருகைப் பதிவேட்டினையும் இணையத்தில் உள்ள டிஜிட்டல் டேட்டாபேஸிற்கு சமர்பித்துள்ளார்.

இது தற்பொழுது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது ஒவ்வொரு மாதமும், 25 பள்ளிகளில் இருந்தும், சுக்லாவினுடைய வங்கிக் கணக்கிற்கு பணம் சென்றுள்ளது. இது அந்த மாநில பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் பேசுகையில், அனாமிகா சுக்லா மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கு உடந்தையாக அதிகாரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது, இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS