உள்நாட்டில் தற்பொழுது வெங்காயத்திற்கு தட்டுபாடு ஏற்படுகின்ற நிலை நீடிப்பதால், அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
மஹாராஷ்டிரா உள்ளிட்டப் பல வடக்கு மாநிலங்களில் தான், வெங்காய உற்பத்தியானது அதிகளவில் இருக்கும். இந்த தென்மேற்குப் பருவமழைக் காணமாக, அங்கு விவசாயமானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் இருந்து மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்டப் பல நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இந்தியாவில் கடந்த ஆண்டு பெய்த மழைக் காரணமாக, வெங்காயத் தட்டுப்பாடானது ஏற்பட்டது. இதனால், அதன் விலையானது கடுமையாக உயர்ந்தது. இந்த விலை உயர்வானது இந்த ஆண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, தற்பொழுது அனைத்து வித வெங்காயங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.