கடன்காரரை செல்வந்தனாக மாற்றிய வெங்காயம்! கர்நாடகாவில் ருசிகரம்!

17 December 2019 அரசியல்
onions.jpg

இந்த வெங்காயம் படுத்தும் பாடு இருக்கே, ஐய்யய்யோ! முடியலடா சாமி எனக் கூறும் அளவிற்கு பலப் பிரச்சனைகள் மத்திய அரசு முதல், சாமானிய மனிதன் வரை அனைவருமே அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வெங்காயம் தற்பொழுது கர்நாடகாவில் ஏழை விவசாயி ஒருவரை கோடீஸவரனாக மாற்றியுள்ளது. ஆம், கர்நாடகாவின் சித்தகுர்கா மாவட்டதினைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூனே.

இவர், தொட்டஹள்ளி கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றார். இவர் காலம் காலமாக, வெங்காயம், நெல் முதலான பொருட்களை விவசாயம் செய்து வருகின்றார்.

இந்த ஆண்டு வெங்காயத்திற்கு தட்டுப்பாடு வரும் என எதிர்பார்த்த அவர், அருகில் இருந்த நிலத்தினை குத்தகைக்கு எடுத்துள்ளார். அதற்காக சுமார் 20 லட்சம் அளவில், கடனும் வாங்கியிருக்கின்றார். சென்ற ஆண்டு, விவசாயத்தின் மூலம் சம்பாதித்த ஐந்து லட்ச ரூபாயினை இந்த ஆண்டு நிலத்தில், வெங்காயத்தின் மீது முதலீடு செய்துள்ளார்.

அவர் நினைத்தது போலவே, வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரவே, அவருடைய நிலத்தில் விதைக்கப்பட்டு இருந்த பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்தது. தன்னுடைய வெங்காய அறுவடையின் பொழுது, சுமார் 250 டன் வெங்காயத்தினை உருவாக்கி உள்ளார்.

இதனை சந்தைக்கு அனுப்பி வைத்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மொத்தம் 40 லட்சம் வருமானம் வரும் எனக் கணித்தவருக்குக் கிடைத்தது ஒரு கோடி ரூபாய். இதனால், இன்ப அதிர்ச்சியில் மனிதர் உறைந்து விட்டாராம்.

கொடுக்கின்ற தெய்வம், வெங்காயத்தின் மூலம் கொடுத்துள்ளது என, அக்கம்பக்கத்தினர் மகிழ்ச்சியில் பாராட்டி வருகின்றனர்.

HOT NEWS