தமிழகத்தில் பசுமை அங்காடிகள் மூலம், வெங்காயமானது 45 ரூபாய்க்கு விற்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
வட இந்தியாவில் கடும் மழையின் காரணமாக, விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால், அங்கு பயிரிடப்பட்ட வெங்காயம் அனைத்தும் அதிக நீரின் காரணமாக, அழுக ஆரம்பித்து உள்ளன. இதனால், தற்பொழுது இந்திய அளவில் கடும் வெங்காயத் தட்டுப்பாடு நீடித்து வருகின்றது. இதனை சரி கட்டும் வேலையில், மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயமானது தோராயமாக 100 ரூபாய்க்கும், சிறிய வெங்காயமானது 80 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை அங்காடிகளில், நாளை (21-10-2020) முதல் வெங்காயமானது 45 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என்றுத் தெரிவித்து உள்ளார். வெங்காயத்தினை யாரும் பதுக்கி வைக்க வேண்டும் எனவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.