வெங்காய விலை கிடுகிடு உயர்வு! மத்திய அரசு முயற்சி!

22 September 2019 அரசியல்
onions.jpg

எது விலைக் கூடினாலும், கூடாவிட்டாலும், இந்த உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தால், அது கண்டிப்பாக அரசாங்கத்திற்குப் பெரும் தலைவலியாக மாறிவிடும். டில்லியில், வெங்காய விலையால், ஆட்சியே மாறியிருக்கின்றது என்பது, நாம் அனைவரும் அறிந்த உண்மை.

இந்நிலையில், தற்பொழுது இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை உயர ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களாக, வட இந்தியாவின் பலப் பகுதிகளில் பெய்து வரும் கனமழைக் காரணமாக, வெங்காயத்தின் உற்பத்திக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காய உற்பத்தி மட்டுமின்றி, வெங்காய வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, கிலோ 30-40 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வந்த வெங்காயம், இந்தியாவின் பலப் பகுதிகளில், கிலோ 70-80 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, வெங்காயம் அழுக ஆரம்பித்துவிட்டதால், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையை தீவிரமாக கண்காணித்து வருகிறது மத்திய அரசு. இந்தப் பிரச்சனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், தென் இந்தியாவின் பல பகுதிகளில், வெங்காயத்தின் விலை சீராகவே உள்ளது.

HOT NEWS