வெங்காயம் கிலோ 100 ரூபாய்! பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை!

26 November 2019 அரசியல்
onions.jpg

வெங்காயம் தற்பொழுது 100 ரூபாயினை எட்டியுள்ளது. எப்பொழுதும், டெல்லி உட்பட வடமாநிலங்களில் தான், வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். ஆனால், மஹாராஷ்டிராவில் பெய்த மழை, புயல், வெள்ளம் உள்ளிட்டக் காரணங்களால் வெங்காயத்தின் விளைச்சல், தற்பொழுது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வெங்காயத்தினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய, மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது. இதனையடுத்து, வெங்காயத்தின் விலை 100 முதல் 150 வரை உள்ளது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய இரண்டின் விலையுமே, போட்டிப் போட்டுக் கொண்டு ஏறி வருகின்றன.

இந்நிலையில், வெங்காயத்தினை அளவுக்கு அதிகமாகப் பதுக்கி வைத்தால், தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

HOT NEWS