வெங்காய விலை மீண்டும் உயர்வு! கிலோ 50 ரூபாய்!

04 November 2019 அரசியல்
onions.jpg

கடந்த ஒரு சில மாதங்களாக வெங்காயத்தினை விலை, கடும் ஏற்றம் மற்றும் இறக்கத்தினைக் கண்டு வருகின்றது.

மஹாராஷ்டிரா, பீகார் உட்பட பல மாநிலங்களில் மழை பெய்ததன் காரணமாக, ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய உற்பத்திக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், வெங்காயத்தின் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தற்பொழுது வெங்காயத்தின் விலைக் கடுமையாக உயர்ந்துள்ளது.

வெங்காய உற்பத்தியில் தற்பொழுது, மஹாராஷ்டிரா மாநிலமே முன்னணியில் உள்ளது. தொடர்ந்து, பெய்த மழையின் காரணமாக, அறுவடைக்காக காத்திருந்த வெங்காயம் அழுகியது. இதனால், அப்பகுதியில் இருந்து இந்தியா முழுவதும், செல்ல வேண்டிய வெங்காயத்தின் அளவும் குறைந்தது. இதனால், வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மீண்டும், மஹாராஷ்டிராவில் வெங்காயம் நல்ல அளவிற்கு உற்பத்தியான பின்னர் தான், இந்த வெங்காயத்தின் விலைக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS