ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

08 July 2020 அரசியல்
mnmhelpp1.jpg

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஜூலை 13ம் தேதி முதல், ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்றக் கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது பல கல்லூரிகளில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே போல், பள்ளிகளுக்கும் ஆன்லைன் மூலம், வகுப்புகள் நடத்துவது குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், வருகின்ற ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS