கடந்த 10 நாட்களில் 3 தமிழர்கள், ஆன்லைனில் ரம்மி விளையாடி, தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
இந்தியாவில் தற்பொழுது நாளுக்கு நாள், ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே போல், அந்த விளையாட்டுக்களை நடத்தும், வலைதளங்களின் எண்ணிக்கையும் உலகளவில் அதிகரித்து வருகின்றது. இந்தியாவினைக் குறி வைத்து மட்டுமின்றி, உலகளவில் உள்ள சூதாட்டப் பிரியர்களை குறி வைத்து, இந்த வலைதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதனால், அந்த நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு, சர்வ சாதாரணமாக வருமானம் வருகின்றது. அந்த நிறுவனங்கள் கட்டும் வரி மூலம், நாடுகளுக்கு நல்ல வருமானம் வருகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு, அந்த வலைதளங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ஆனால், தமிழகத்தில் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி பலரும் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ந்து நீடிக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் சீரநாயக்கன் பாளையத்தினைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தற்பொழுது ஆன்லைனில் ரம்மி விளையாடி, நஷ்டமானாதல் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 10 நாட்களில் மட்டும் 3 தமிழர்கள் இந்த ஆன்லைனில் ரம்மி விளையாடி, தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதலில் சிறிய சிறிய வெற்றிகளைப் பெற்றதும், பெரிய அளவில் முதலீடு செய்கின்றனர். அந்த முதலீடுகளினை ரம்மி விளையாடி தோற்றதும், விட்டதைப் பிடிக்கின்றேன் என்றுக் கூறி, மேலும் மேலும் பணத்தினை இதில் இழக்கின்றனர். இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், அரசாங்கத்தினை எந்த அளவிற்கு குறைக் கூற முடியும் என்று தெரியவில்லை. காரணம், விளையாடுபவர்கள் ஜெயித்தால், அரசாங்கத்தினைப் பற்றி பேசுவது கிடையாது. தோல்வி அடைந்தால், அனைத்திற்கும் அரசாங்கமே காரணம் என்றுக் கூறுவது வேடிக்கையான விஷயம் ஆகும்.