பாகிஸ்தானுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட ஏழு இந்திய கடற்படை வீரர்களை, ஆந்திரா போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்திய புலனாய்வுத் துறையும், மத்தியப் புலனாய்வுத் துறையும் இணைந்து, ஆப்பரேஷன் டால்பின் நோஸ் என்றப் பெயரில் ஏழு இந்தியக் கடற்படை வீரர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது.
அவர்கள் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பதாகவும், மேலும் அவர்களுடையப் பெயரில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் கூறியுள்ளது. இதனையடுத்து, ஹவாலா தரகர் உட்பட ஏழு பேரையும் ஆந்திராப் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.