ஆப்பரேஷன் நமஸ்தே! களமிறங்கும் இந்திய இராணுவம்!

28 March 2020 அரசியல்
armychief.jpg

இந்திய மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, ஆப்பரேஷன் நமஸ்தே என்றப் புதியத் திட்டத்தினை, அமல்படுத்த உள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் இராணுவ வீரர்களையும், இராணுவ வீரர்களின் குடும்பத்தினரையும் கோவிட்-19 பாதிப்பில் இருந்து பாதுக்காக்க முடியும் என, இந்திய இராணுவ தலைமைத் தளபதி எம்எம் நராவனே நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், இந்தியா முழுக்க, இந்திய இராணுவ வீரர்களும், இராணுவத்தினரின் குடும்பத்தினரும் உள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பானது மிகவும் முக்கியமானது. அவர்களுக்காக எட்டு சிறப்பு முகாம்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவைகள் மூலம், இராணுவத்தினரின் குடும்பங்கள் பாதுகாக்கப்படும். அந்த முகாம்களின் உதவி தேவைப்படுவோர், சிறப்பு எண்களைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, ஆப்பரேஷன் பராக்ரம் என்ற திட்டம் செயல்பட்டது எனவும், அதன் மூலம் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது எனவும், அதே போல் இந்த முறையும் வெற்றிகரமாக ஆப்பரேஷன் நமஸ்தே நிறைவேறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்காக, இந்திய இராணுவ வீரர்கள் சோசியல் டிஸ்டன்ஸினைப் பின்பற்ற இயலாது எனக் கூறியுள்ளார்.

HOT NEWS