10 நாட்களில் பதிலளிக்க உத்தரவு! ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

04 February 2020 அரசியல்
opslatestpics.jpg

வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி அன்று, சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அதிமுகவின் ஆட்சிக்கு எதிராக, தங்களுடைய வாக்கினை அளித்தனர். இதனால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது. ஆனால், எங்களுக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இதனையடுத்து, வாக்கெடுப்பில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கினை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது திமுக. அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பேரவைத் தலைவர் தனகோபால் செய்தது தவறு. ஏன் அவர் தாமதம் செய்தார்? தேர்தல் ஆணையத்தில் இருக்கும் வழக்கினைக் காரணம் காட்டுவது சரியா? எனவும், தமிழக அரசு என்ன செய்யப் போகின்றது என? உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்த வழக்கினை வருகின்ற பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதற்குள், சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

HOT NEWS