அமெரிக்காவிற்கு பறந்த ஓபிஎஸ்! ரவீந்திரநாத்தும் பறந்தார்!

08 November 2019 அரசியல்
ops.jpg

அதிமுக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர் செல்வம், பத்து நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா கிளம்பினார்.

இன்று காலையில், பத்து நாட்கள் அரசு முறைப் பயணமாக, அமெரிக்கா கிளம்பினார். நாளை தொடங்கி, நவம்பர் 17ம் தேதி வரை, அமெரிக்காவின் பல மாகாணங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கு பெறுகின்றார். பின்னர், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான கூட்டங்களிலும் பங்கு பெறுகின்றார்.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் விழாவில் அவருக்கு ரைசிங் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு தமிழக முதல்வர் திரு எடப்பாடி.பழனிசாமி, பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இன்று காலையில், இவரை வழி அனுப்புவதற்காக, விமான நிலையத்தில் குவிந்த அதிமுக தொண்டர்கள், அவருக்கு உற்சாகமாக விடையளித்தனர். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துடன், அவருடைய மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஓ.பி.ரவீந்திரநாத்தும் அமெரிக்காவிற்குப் பயணம் செய்துள்ளார்.

HOT NEWS