ஆர்பிட்டரின் உயரம் குறைப்பு! விக்ரம் லேண்டரைத் தேடும் பணித் தீவிரம்!

09 September 2019 அரசியல்
vikramlanderfound.jpg

கடந்த சனிக் கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில், விக்ரம் லேண்டரை நிலவின் தென்பகுதியில், நிலைநிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிலவின் தரைதளத்தில் இருந்து சுமார் 2.1 கிலோமீட்டர் இருக்கின்ற நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து கிடைத்து வந்த சிக்னல், மறைந்தது. இதனால், விஞ்ஞானிகள் முதலில் குழம்பினர். பின்னர், அதை நாம் இழந்துவிட்டோம் என தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், தொடர்ந்து அதனைத் தேடும் பணித் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலவினை சுற்றி வரும் ஆர்ப்பிட்டரை வைத்து, விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தைத் தேடத் தொடங்கினர். இந்நிலையில், நேற்று மதியம் ஆர்பிட்டரில், உள்ள வெப்ப உணர்வுக் கருவியின் மூலம், விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினைக் கண்டுபிடித்தனர். இருப்பினும், தெளிவாக பார்க்கமுடியவில்லை.

இதன் காரணமாக, ஆர்பிட்டரின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தை குறைக்க, இஸ்ரோ முடிவு செய்துள்ளது. ஆர்பிட்டர் தற்பொழுது நிலவிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. அதனை இன்று 50 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரச் செய்ய, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்பொழுது கிடைத்துள்ளத் தகவலின் படி, தரையிறங்கும் இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் மட்டுமே விக்ரம் லேண்டர் எவ்வித சேதமுமின்றி இருக்கின்றது என, சிவன் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார்.

இதனால், அடுத்த 12 நாட்களில், ஆர்பிட்டரின் உதவியின் மூலம், அதன் சிக்னலைப் பெறும் பணிகள் பெற முடியும் என நம்புகின்றனர்.

HOT NEWS