ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி! சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்!

26 June 2020 அரசியல்
imrankhan10.jpg

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஒசாமா பின்லேடனை தியாகி எனக் குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது, ஒசாமா பின்லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றதால் தான், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என்று இம்ரான் கான் பேசினார். இதற்கு அந்நாட்டு எதிர்கட்சியினர் உட்படப் பலரும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவின் சிறப்புப்படையானது, பாகிஸ்தானின் அபோதாபாத்திற்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கு ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றது. இதனால், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் விரிசல் உண்டானது. தொடர்ந்து, பலரும், அமெரிக்கா செய்ததற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS