புவிக்கு திரும்பும் ஓசிரிஸ் ரெக்ஸ்! தொழில்நுட்பக் கோளாறால் நாசா முடிவு!

01 November 2020 தொழில்நுட்பம்
osirisrex.jpg

நாசா மூலம் பென்னாவு என்ற விண் கல்லிற்கு அனுப்பப்பட்ட ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலம், தற்பொழுது புவியினை நோக்கி திரும்பத் தொடங்கி உள்ளது.

உலகளவில் விண்வெளி ஆய்வில் முதன்மை இடத்தில் உள்ள நிறுவனம் என்றால், அது அமெரிக்காவினைச் சேர்ந்த நாசா அமைப்பு தான். அந்த அமைப்பானது, புவியில் இருந்து சுமார் 320 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பென்னாவு என்ற விண்கல்லினை நோக்கி, ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தினை அனுப்பியது. அந்த விண்கலமும் வெற்றிகரமாக அந்த பென்னு என்ற விண்கல்லினை கடந்த வாரம் அடைந்தது.

சுமார் 500 மீட்டர் சுற்றளவு உள்ள அந்தக் கல்லில் இருந்து, 400 கிராம் எடையுள்ள மாதிரிகளை அந்த விண்கலம் சேகரித்தது. இருப்பினும், அதனை மூடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அதனை வெற்றிகரமாக சரி செய்த விஞ்ஞானிகள் அது மீண்டும் புவிக்குத் திரும்பி வருவதற்கான திட்டங்களை தீட்ட ஆரம்பித்தனர். அதன்படி, அந்த ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலமானது, தற்பொழுது புவிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

இது குறித்து பேசிய அந்த திட்டத்தின் மேனேஜர் ரிச் பர்ன்ஸ், திட்டமிட்டது போல, மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு உள்ளது. ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலமானது, வருகின்ற 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புவிக்குத் திரும்பும் எனக் கூறியுள்ளார். புவியில் இருந்து மிகத் தொலைவில் உள்ள இந்த விண்கலம் அனுப்பும் சிக்னல்கள், புவியினை அடைய 18 நிமிடங்கள் அதிகமாக எடுத்துக் கொள்கின்றன. அதாவது, 0.01 நிமிடத்தில் சிக்னல் அனுப்பினால் அது 0.18 நிமிடத்தின் பொழுது தான் புவிக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அது சேகரித்துள்ள மாதிரியில் என்ன இருக்கின்றது, ஒருவேளை உயிரி மூலக் கூறுகள் இருந்தால் என்ன நடக்கும், எதற்காக இவ்வளவு சிரமமான செயலில் நாசா முழுவீச்சில் இறங்கி உள்ளது உள்ளிட்டக் கேள்விகள் தற்பொழுது எழுந்துள்ளன.

HOT NEWS