ஓஜா போர்ட் என்றப் பெயரினை நாம் அனைவரும், தமிழ் சினிமாவின் பலப் படங்களில் கேட்டிருப்போம். இதனால், பல விபரீதங்களும் நடைபெற்று உள்ளது என்பது பலர் அறிந்த உண்மை. அதனைப் பற்றி சற்று பார்ப்போம்.
உலகளவில் பல அமானுஷ்யமான செயல்கள் தினமும், ஒவ்வொரு நொடியும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அவைகளில் பெரும்பான்மையானவை, மக்களால் தூண்டப்பட்டே நடைபெறுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், மக்களிடம் இருக்கின்ற தெரிந்து கொள்ளும் ஆர்வமும், தேவையற்ற ஆசைகளுமே ஆகும். இறந்த ஆன்மாக்களுடன் பேசுவதற்குப் பலவித முறைகள் உள்ளன. அவைகளில் அனைவராலும் பயன்படுத்தப்படும் முறையாக இந்த ஓஜா போர்டு மாறியுள்ளது.
இந்த ஓஜா போர்டினை வீட்டில் வைத்து விளையாட இயலும். இதனைப் பயன்படுத்தி, வீட்டிற்கு அருகில் உள்ள ஆன்மாவிடம் பேச இயலும். அதற்கு முதலில் வீட்டினை மூடுகின்றனர். பின்னர், இந்த போர்டிற்கு அருகில் ஒரு மெழுகுவர்த்தி அல்லது ஒரு விளக்கினை ஏற்றி வைக்கின்றனர். அதனையடுத்து, ஒரு நாணயத்தினைப் பயன்படுத்தி பேய் அல்லது ஆன்மாக்களுடன் பேசுகின்றனர். இந்த ஓஜா போர்டில் A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துக்கள் இருக்கும். அதே போல் 0 முதல் 9 வரையிலான எண்களும் இருக்கும்.
இந்த போர்டினை திறந்து வைத்து, ஒரு நாணயத்தினை அந்தப் போர்டில் வைக்கின்றனர். பின்னர், ஆம் இல்லை என்றப் பதில் மூலம் ஆன்மாக்களுடன் உரையாற்றுகின்றனர். ஆம், இல்லை என்ற வார்த்தைகளும் இதில் இடம்பெற்று இருக்கும். உதாரணத்திற்கு இங்கு யாராவது இருக்கின்றார்களா இல்லையா என கேள்வி கேட்பர். அதற்கு அருகில் ஆன்மா இருந்தால், அது வந்து ஆம் என்ற எழுத்தின் மேல், நாணயத்தினை வைக்கும்.
அதிலிருந்து பேச ஆரம்பித்துவிடும். இவ்வாறுப் பலரும் ஆன்மாக்களுடன் பேசி வருகின்றனர். இதனை ஒரு சிலர் விளையாட்டாக செய்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வதில் பல சிக்கல்களும் உண்டு. நம்முடன் பேசும் ஆன்மா அமைதியான ஒன்று என்றால், மனிதர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஒருவேளை அது உக்கிரமானதாக இருந்தால், அடுத்து என்ன நடக்கும் என்பது, யாருக்கும் தெரியாது.
இந்த விளையாட்டினை விளையாடியப் பலரும் மரணம் அடைந்து இருக்கின்றனர், என்றத் தகவலும் செய்திகளில் வந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.