ஓமோமோ இன்டர்ஸ்டெல்லாரில் இருந்து பூமிக்கு வருகிறது!

03 July 2019 தொழில்நுட்பம்
oumuamua.jpg

பூமியை நோக்கி ஓமோமோ என்ற ஒரு அடையாளம் தெரியாதப் பொருள் வந்து கொண்டு இருப்பதாக, வான்வெளி ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்தப் பொருள் இன்டர்ஸ்டெல்லாரில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் என்ன பெரிய விஷயம். இந்த மாதிரி பல பொருட்கள் வந்து இருந்தாலும், இது சற்று வித்தியாசமானது. ஏன் தெரியுமா? வந்து கொண்டிருப்பது விண் கல்லா அல்லது ஏலியன்களின் விண்கலமா என்பது தான்!

அக்டோபர் 19, 2017ம் ஆண்டு அன்று, ஒரு பெரிய பொருள் சூரியனைக் கடந்தது. அன்று முதல் இந்த மர்மப் பொருளை கண்காணித்து வருகின்றனர். அப்படி இதனைக்கண்காணிப்பதற்கான முக்கியக் காரணம், இது 7.5 மணி நேரத்திற்கு ஒருமுறை தன்னுடைய திசையை மாற்றிக் கொண்டு, வந்து கொண்டு இருப்பது தான். பொதுவாக, திசையை மாற்றிக் கொண்டு செல்லும் கற்கள் வேறு பாதைக்குச் சென்றுவிடும். ஆனால், இந்த மர்மப் பொருள் தன்னுடையத் திசையை மாற்றிக் கொண்டு வந்தாலும், தன்னுடையப் பாதையை விட்டு விலகாமல் வந்து கொண்டு இருக்கிறது.

இதனால், தற்பொழுது அனைத்து விஞ்ஞானிகளும் சிறிது அச்சத்துடன் இருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், இது விமானங்களைத் திட்டமிட்டுப் பறப்பது போல், இதுவும் தன்னுடைய சொந்தப் பாதையில் குறிப்பிட்ட அதே வேகத்தில் பறந்து கொண்டிருப்பது தான்.

இதனை உண்ணிப்பாக கவனித்து வரும் விஞ்ஞானிகள் ஒரு வேளை இது வேற்று கிரக வாசிகளின் விமானமாக இருக்கலாம். அப்படி இருந்தால், கண்டிப்பாக இது பூமிக்குள் வந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என அடித்துக்க கூறுகின்றனர்.

HOT NEWS