ஓவர்லோட் திரைப்படம் பாருங்கள்! நாசியின் ஜாம்பி படையைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

16 September 2019 சினிமா
overload.jpg

ஹிட்லரைப் பற்றித் தெரியாதே மனிதர்களே கிடையாது. அந்த அளவிற்கு மனிதர் மிக மோசமானவராக, உலகம் முழுக்க உள்ளவர்களால் பார்க்கப்படுகிறார். அவரைப் பற்றிய ஒரு பக்கத்தை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. அவர் மிகப் பெரிய விஞ்ஞான பித்தன் ஆவார். புதிய புதிய கண்டுபிடிப்புகளை விரும்பியவர்.

ஹிட்லரின் நாசிப் படைகளுக்கும், மற்ற நாட்டின் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடைபெற்ற தருணத்தில், அவர் பலவிதமான ஆராய்ச்சிகளை செய்து வந்தார். அப்பொழுது, இரவாமல் சண்டையிடும் போர் வீரர்கள், பறக்கும் விண்கலம், இரசாயன வெடிகுண்டுகள், விசித்திரமான ஆயுதங்கள் என, பல வகையான ஆராய்ச்சிகளில் அவருடைய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அதில் ஒன்று தான் இந்த ஜாம்பி படை. அதனைப் பற்றியது தான் இந்த ஓவர்லோட் என்னும் திரைப்படம். படத்தின் தொடக்கத்தில், இருந்து கடைசி வரை ஒறே விஷயம் தான். ஒரு சர்ச் இருக்கும். அது நாசியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கண்ட்ரோல் ரூம் உள்ளது. அந்தக் கண்ட்ரோல் ரூமினை தகர்த்தால், நாசிக்கு எதிரானப் படைகள் உள்ளே வந்து, நாசிகளை அழித்துவிடும் இது தான் படத்தின் கதை.

இதை நம்பியே, படத்தின் நாயகனும், அவருடைய குழுவினரும் பயணம் செய்கின்றனர். விமானத்தில் பயணம் செய்யும் பொழுது, மூத்த அதிகாரியின் பழக்கம் ஏற்படுகிறது. அவருடன் கிளம்பும் பொழுது, ஒரு இடத்தில் பாராசூட் மூலம் குதிக்கின்றனர். அப்படி அவர்கள் குதிக்கையில், நான்கு பேர் மட்டுமே பிழைக்கின்றனர். அவர்கள், ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்கின்றனர். அந்தப் பெண் ஒரு திருடி. அந்தப் பெண்ணின் உதவியுடன், பிரான்ஸ் நாட்டிற்குள் பதுங்கி இருக்கின்றனர். அந்த வீரர்களில் இருவர் பாதுகாப்பு பணிக்காக இரகசியமாக, அந்த சர்ச்சை நோட்டம் விடுகின்றனர். படத்தின் நாயகன், ஒரு கட்டத்தில் அவர்களை அழைக்கச் செல்ல முயற்சி செய்து, நாசியின் அந்தச் சர்ச்சுக்குள் எளிதாக சென்று விடுகிறான். அங்கு நடத்தப்படுகின்ற விதவிதமான ஆராய்ச்சிகளைக் காண்கின்றான்.

அந்த ஆராய்ச்சிகளைப் பார்த்துப் பயத்தில் என்னசெய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு அறையாக தப்பிக்கும் வழியைக் கண்டுபிடிக்க முயல்கின்றான். அப்படி போகும் அறைகளில் ஒரு அறையில், பல ஊசிகள் உள்ளன. அவைகளில் ஒன்றை எடுத்துத் தன்னுடையப் பையில் வைத்துக் கொள்கிறான். பின்னர், அந்த சர்ச்சில், அவர்கள் தகர்க்க வேண்டிய அந்த கண்ட்ரோல் ரூமையும் பார்க்கின்றான். பின்னர், அங்கிருந்து பழைய படி, தப்பித்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு செல்கிறான். அவர்கள் குழுவாக இணைந்து, அந்த சர்ச்சிற்கு செல்கின்றனர். இடையில், நடக்கும் சம்பவங்களால், அந்தப் பெண்ணின் சிறிய வயது சகோதரனை நாசிப் படை தலைவன் ஒருவன் அழைத்துச் செல்கின்றான்.

இதனால், அந்தப் பெண்ணும் தன் தம்பியை மீட்க செல்கின்றாள். அவள் தம்பியை மீட்டாளா? அந்த கட்டுப்பாட்டு அறையை நாயகன் தகர்த்தானா? அந்த ஊசி எதற்குரியது என்பதனை விறுவிறுப்பாக கூறியிருக்கின்றனர்.

அந்த ஊசியினை இறந்த உடலில் போட்டுவிட்டால் போதும். அவர்கள் மீண்டும் எழுந்து நின்றுவிடுவர். அவர்களுக்கு, வலி இருக்காது. மிகவும் கொடூரமான சக்தியுடன் சண்டையிட ஆரம்பித்துவிடுவர். அவர்களை எரித்துத் தான் கொல்ல வேண்டும். அப்படி ஒரு படையைத் தான் ஹிட்லர் உருவாக்கிக் கொண்டு இருந்துள்ளார். அதனை எப்படி, முளையிலேயே நாயகன் கிள்ளி எரிகிறான் என்பதனை, படபடக்கும் விதத்தில் கூறியுள்ளனர்.

ஹிட்லர் உண்மையிலேயே, அப்படியொரு படையை உருவாக்கி வந்தார் எனப் பலரும் கூறுகின்றனர். அது உண்மையோ, இல்லையோ, படம் நம்மை மிகவும் கவர்கின்றது.

HOT NEWS