இங்கிலாந்தில் மருந்து கண்டுபிடிப்பில் பின்னடைவு! உண்மையை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானி!

20 May 2020 அரசியல்
covid19medicine1.jpg

இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தற்பொழுது கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கொரோனா வைரஸிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ChAdOx1 nCoV-19 என்ற மருந்தினை அவர்கள் தயாரித்து இருந்தனர். இதற்காக, அவர்களுக்கு இங்கிலாந்து அரசின் சார்பில் பெரிய அளவில் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒன்றாக இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கண்டுபிடித்துள்ள மருந்தானது, குரங்குகள் மீது பரிசோதனை செய்யப்பட்டது. முதலில், குரங்குகளுக்கு கொரோனா வைரஸானது, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. பின்னர், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியானது செலுத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்தப்படாத குரங்குகளின் உடலில், எந்த அளவிற்கு கொரோனா வைரஸ் இருந்ததோ, அதே அளவானது தடுப்பூசிப் போடப்பட்ட குரங்குகளின் உடலிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக, டாக்டர் வில்லியம் ஹெசல்டின் கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசியின் மூலம், மனித உடலில் கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுவதை தடுக்க இயலாது எனக் கூறியுள்ளார். இந்த மருந்தானது, கிட்டத்தட்ட தோல்வியடைந்த மருந்தாகவேப் பார்க்கப்படுகின்றது.

HOT NEWS