இந்தியாவின் 5 இடங்களில் ஆக்ஸ்போர்ட் மருந்து சோதனை!

29 July 2020 அரசியல்
vaccination.jpg

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசியானது, இந்தியாவின் 5 இடங்களில் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

உலக அளவில் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் முன்னணி நாடுகள், மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் தொற்றிற்கு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், அஸ்டோரஜெனிகா நிறுவனமும் இணைந்து புதியதாக தடுப்பூசி ஒன்றினைக் கண்டுபிடித்தது.

இதன் இரண்டு கட்ட பரிசோதனைகளும் வெற்றியடைந்துள்ள நிலையில், இதன் மூன்றாம் கட்டப் பரிசோதனையானது தற்பொழுது உலகின் பல நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த மருந்தினை, உலகின் பல நாடுகளுக்கு விற்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் முன்னணி நிறுவனமும், உலகின் மிகப் பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனமுமான சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு, இதற்கான உரிமையினை ஆக்ஸ்போர்ட் வழங்கி உள்ளது.

இந்த மருந்தானது தற்பொழுது இந்தியாவின் ஐந்து இடங்களில், மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த மருந்தினை இந்தியாவின் 1000 தன்னார்வலர்கள் மீது சோதனை செய்ய உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS