நாளை மனிதர் மீது தடுப்பூசி பரிசோதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

22 April 2020 அரசியல்
englandhs.jpg

நாளை மனிதர்கள் மீது, கொரோனா வைரஸ் தடுப்பூசியானது பரிசோதிக்கப்பட உள்ளது என, இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் காரணமாக, பலரும் அங்குப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை முன்னிட்டு, அந்த நோய்க்கான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில், உலகின் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தற்பொழுது வரை, 70க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனையில் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மாட்ஹேன்காக் செய்தியாளர்களுக்காக வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.

அதில், இங்கிலாந்து நாட்டில் பரவி இருக்கின்ற கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பூசி மருந்தானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை, நாளை (22-04-2020) அன்று முதல் முதலாக மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய உள்ளோம். இந்த பரிசோதனை வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்தக் கட்டப் பரிசோதனையானது நடத்தப்படும் என்றுக் கூறினார்.

இந்த தடுப்பூசியினை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது எனவும், இந்த வைரஸை தடுப்பு மருந்தால் மட்டுமே ஒழிக்க முடியும் எனவும், அதுவரை நம்முடையப் போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளார். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக 42.5 மில்லியன் இங்கிலாந்து பவுண்டானது, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இந்தப் பணமானது இம்ப்பீரியல் கல்லூரிக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS