தற்பொழுது இரண்டாவது கட்ட சோதனைக்கு, இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் மருந்தானது சென்றுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் முன்னணி நாடுகள், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யா ஏற்கனவே ஸ்புட்னிக் வி என்ற மருந்தினைக் கண்டுபிடித்து உள்ளது. அதே போல், சீனாவும் தற்பொழுது மருந்து கண்டுபிடித்து உள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் கண்டுபிடித்திருந்த மருந்தினை, இங்கிலாந்தின் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனமும், இந்தியாவின் சீரம் இஸ்ட்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனமும் ஆய்வு செய்து வருகின்றன. இதில், மனிதர்கள் மீதான முதற்கட்ட ஆய்வானது வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட ஆய்வு குறித்தத் தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 25ம் தேதி அன்று, மனிதர்கள் மீதான 2ம் கட்ட சோதனையானது இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக 1600 மனிதர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த சோதனையானது முதலில் புனேயில் உள்ள பாரதி வித்யாபீத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மொத்தம் 17 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
அங்கு 18 வயதிற்கு மேற்பட்டோர்களிடம் இந்த மருந்தானது, சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனைகளின் முடிவினைப் பொறுத்தே, 3ம் கட்ட சோதனையானது செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, கோவாக்ஸின் மருந்தானது, பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.