இங்கிலாந்தில் தன்னார்வலர்கள் மீது பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனாவைரஸால், உலகம் முழுக்க மூன்று கோடிக்கும் அதிகமானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலகின் பல முன்னணி நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதில், ரஷ்ய அரசு கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது. ஸ்புட்னிக் வி எனப் பெயரிட்ட அந்த மருந்தினை, தங்களுடைய பொதுமக்களுக்கும் வழங்கி வருகின்றது.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரோஜெனிக்கா எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து ஒன்றினை உருவாக்கி உள்ளது. அந்த மருந்தானது, தற்பொழுது மூன்றாவது கட்ட ஆய்வில் உள்ளது. இந்த ஆய்வானது, உலகின் பல முன்னணி நாடுகளில் நடைபெற்று வருகின்றது. அந்த ஆய்வானது கடந்த 2 வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது இந்த ஆய்வில் பெரிய அளவில் தொய்வானது ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பேசியுள்ள பிரேசில் சுகாதாரத்துறை, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த மருந்தானது, பிரேசிலில் இந்த மருந்தானது ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகின்றது. இந்த மருந்தினை ஏற்றுக் கொண்ட 28 வயதுடைய தன்னார்வல இளைஞர் தற்பொழுது மரணம் அடைந்து உள்ளார். இருப்பினும், இந்த மருந்தானது தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றது எனக் கூறியுள்ளார்.
இதனால், இந்த மருந்தின் மீதான நம்பகத் தன்மையின் மீது, சந்தேகம் எழுந்துள்ளது. எவ்வாறு இருப்பினும், இது பற்றியக் கூடுதல் தகவல்களை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், ஆஸ்ட்ரோஜெனிகா நிறுவனமும் கூறவில்லை. தொடர்ந்து பரிசோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.