இந்தியாவில் 1000 ரூபாய்க்குள் OXFORD கொரோனா ஊசி! மருந்து நிறுவனம் தகவல்!

22 July 2020 அரசியல்
vaccination1.jpg

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியானது, நவம்பர் மாதத்தில் இந்தியாவில் கிடைக்கும் என, இந்தியாவின் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியினை வெற்றிகரமாக சோதித்து உள்ளது. அது விரைவில், இறுதிக் கட்ட சோதனைகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்று நம்பப்படுகின்றது. இதற்குப் பலரும் தங்களுடைய வரவேற்பினை தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஊசியின் 200 கோடி டோஸ்களை தயாரிக்கும் ஆர்டர் கிடைத்துள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. இந்த தடுப்பூசியினை மனிதர்கள் மீது சோதித்ததில், எவ்வித பக்க விளைவுகளோ அல்லது தீய விளைவுகளோ ஏற்படவில்லை. மேலும், இந்த தடுப்பூசியினை எடுத்துக் கொண்ட மனிதர்களின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியானது பல மடங்கு அதிகரித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த மருந்திற்கு, இந்தியாவின் சார்பில் லைசென்ஸ் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்த மருந்தினை 1000 பேரிடம் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முடிந்ததும் மாதம் 3 கோடி டோஸ்கள் இந்தியர்களுக்காக உற்பத்தி செய்து விற்கப்படும். இந்தியாவிற்காக 100 கோடி டோஸ்களை உற்பத்தி செய்ய உள்ளதாக, சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் மூத்த அதிகாரி பேசுகையில், மாதம் ஆறு கோடி டோஸ்கள் உற்பத்தி செய்தாலும், இந்தியாவிற்கு 3 கோடி டோஸ்கள் வழங்கப்படும். இந்த மருந்தானது, இந்தியாவில் 1000 ரூபாயில் கிடைக்கும் விதத்தில் உற்பத்தி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். மூன்றாவது கட்ட சோதனையானது இந்தியாவில் நடக்கும். அது முடிந்து இரண்டு முதல் இரண்டரை மாதங்களில் இந்த மருந்தானது பயன்பாட்டிற்கு வரும். அதற்கு இந்தியாவின் ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

HOT NEWS