ஓசோன் ஓட்டை மூடியது! விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!

28 April 2020 தொழில்நுட்பம்
ozonehealing.jpg

அண்டார்டிகா பகுதியில் விழுந்த ஓசோன் ஓட்டையானது, தற்பொழுது விரைவாக மூடப்பட்டு உள்ளதாக, விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

உலகின் யாரும் பயன்படுத்த முடியாதப் பகுதியாக, ஆர்க்டிக் பகுதி உள்ளது. அப்பகுதியானது, கடும் குளிர், பனி மற்றும் பனிப்பாறைகளைக் கொண்டது. அங்கு உலகினைக் காக்கும் அரணாக இருக்கின்ற ஓசோன் படலமானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது.

ஆக்சிஜனின் மூன்றடுக்கு படலம் தான் ஓசோன் படலம் (ஓ3). இந்த ஓசோன் படலமானது, சூரியனில் இருந்து புவிக்குள் நுழையும் புற ஊதாக்கதிர்களை தடுத்து, மனிதர்களால் தாக்குப்பிடிக்கக் கூடிய ஒளியினை மட்டும், உள்ளே நுழைய விடுகின்றது. மேலும், இந்த ஓசோன் படலத்தால், வளிமண்டலமும் நிலையான தன்மையுடையதாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ள காரணத்தினால், போக்குவரத்து தடையாகி உள்ளது. தொழிற்சாலைகளும் பெருமளவில் மூடப்பட்டு உள்ளன. பொதுமக்கள் நடமாட்டமும், வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்டு இருந்த ஓசோன் படல பாதிப்பானது, அதிகளவில் குறைந்துவிட்டது.

ஓசோன் படத்தில் ஏற்பட்டு இருந்து ஓட்டையானது, மூடப்பட்டு உள்ளது. பெரிய பெரிய துளைகள் மற்றும் ஓட்டைகள் எல்லாம் அடைபட்டு உள்ளன. விரைவில், அனைத்து ஓசோன் ஓட்டைகளும் சரியாகிவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

HOT NEWS