இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் கீழ் செல்லலாம்! ப சிதம்பரம் கருத்து!

21 January 2020 அரசியல்
pchidambramsabha.jpg

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் கீழ் செல்லலாம் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியுள்ளார்.

சிறையில் இருக்கும் பொழுது கூட, தன்னுடைய டிவிட்டர் கணக்கின் மூலம், தன்னுடைய கருத்துக்களை ப சிதம்பரம் வெளியிட்டு வந்தார். அப்பொழுது, நான் டிவிட் செய்யவில்லை எனக்குப் பதிலாக என்னுடையக் குடும்பத்தார் டிவிட் செய்கின்றனர் என்றார். இந்நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் மூலம் இந்தியப் பொருளாதாரம் பற்றி டிவீட் செய்துள்ளார்.

ஐஎம்எப் தலைமை பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், இந்தியாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். இதனால், அவர் மீது அரசாங்கமோ அல்லது அமைச்சர்களோ தாக்குதல்கள் ஆரம்பிக்கலாம்.

அவர் கூறுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 4.8% இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது. உண்மையில், இதுவே மிகைப்படுத்தப்பட்டதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

நடப்பு நிதியாண்டில், 4.8% கீழாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு எனவும், அவர் கூறியுள்ளார்.

HOT NEWS