ஆர்பிஐ மத்திய அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்! ப சிதம்பரம் கருத்து!

25 May 2020 அரசியல்
pchidambaram2.jpg

மத்திய அரசின் கடமையை, ரிசர்வ் வங்கி உணர்த்த வேண்டும் என, முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார்.

கடந்த வாரம், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சியானது முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, மிகவும் குறைவாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தியும் மிகவும் குறைந்து உள்ளது என, சக்திகாந்த தாஸ் கூறினார்.

இது குறித்துப் கருத்துத் தெரிவித்துள்ள ப சிதம்பரம், நாட்டின் நுகர்வானது மிகவும் குறைந்துவிட்டது. 2020-2021ம் ஆண்டு காலக்கட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, எதிர்மறையாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அப்படி இருக்கையில், ஏன் சந்தையில் அதிகப் பணப்புழக்கத்தினை நுழைக்கின்றார்.

அவர் அப்பட்டமாக அரசாங்கத்திடம் ‘உங்கள் கடமையைச் செய்யுங்கள், நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்று சொல்ல வேண்டும். 20 லட்சம் கோடி குறித்து, அவர்கள் புகழ்கின்றார்கள். அது நம்முடைய உள்நாட்டின் உற்பத்தியில், ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் தான் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS