சிதம்பரத்தைக் கைது செய்த அமலாக்கத் துறை!

16 October 2019 அரசியல்
pchidambaram2.jpg

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், திஹார் சிறையில் உள்ள, சிதம்பரத்தை அமலாக்கத் துறையும் கைது செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, ப சிதம்பரத்தினை, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டின் சுவர் ஏறி குதித்து, சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக, கைது செய்தனர். அவர் மீது, ஊழல் புகார் சுமத்தியுள்ள சிபிஐயும், அமலாக்கத்துறையும் விசாரணை செய்து வருகின்றன.

இந்நிலையில், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவருடைய ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றன. அவரும் திஹார் சிறையில் இருக்கின்றார். இதனிடையே, இவரை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், அவரிடம் திஹார் சிறையில் உள்ள சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளவும், தேவை ஏற்படும் பட்சத்தில், அவரைக் கைது செய்யவும் அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, இன்று காலை சரியாக 8.30 மணியளவில், திஹார் சிறையில் உள்ள சிதம்பரத்திடம், மூன்று பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பின், அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரத்தினை கைது செய்தனர். மேலும், அவரை வெளியே அழைத்து செல்ல அனுமதி அளிக்காத நீதிமன்றம், திகார் சிறையிலேயே வைத்து, விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. இன்று விசாரணை முடிந்ததும், நாளை மீண்டும் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

HOT NEWS