ப சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்!

23 October 2019 அரசியல்
pchidambaram12.jpg

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ஊழல் புகார் சாட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரத்திற்கு, நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது நீதிமன்றம்.

சிபிஐ வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு, ப சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க முடிவு செய்தது. இருப்பினும், சிபிஐ வழக்கறிஞரிடம் ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா எனவும் கேட்டது. அதற்கு ஆட்சேபனை தெரிவித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், ப சிதம்பரம் வெளியில் விடப்பட்டால், அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் களைக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுவரை எவ்வித அதிகாரப் பூர்வ ஆதாரத்தையும் சிபிஐ சமர்பிக்கவில்லை. எஸ்எம்எஸ், ஈமெயில், தொலைபேசி உரையாடல் அல்லது சரியான ஆதாரம் என எதையும், சிபிஐ தரப்பில் முன் வைக்கவில்லை. அதனால், உங்களுடைய தரப்பபு வாதத்தினை ஏற்க முடியாது என்றுக் கூறியது.

பின்னர், ஒரு லட்ச ரூபாய் பத்திரத்தினை பிணையமாக வைத்து, ப சிதம்பரத்திற்கு சிபிஐ விசாரணையில் இருந்து, ஜாமீன் வழங்கியது. இருப்பினும், அவர் தொடர்ந்து அமலாக்கத் துறையின் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் வெளயில் வரவில்லை. தொடர்ந்து, அவர் அமலாக்கத் துறையின் விசாரணையில் இருந்து வரும் சூழ்நிலையில், வரும் 24ம் தேதி அவர் மீண்டும் அமலாக்கத் துறையின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்த பொழுது, தான் ஒரு 74 வயது மூத்த குடிமகன் எனவும், இந்த வயதில் இருக்கக் கூடிய நோய்கள் இருப்பதால், ஜாமீன் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source:www.ndtv.com/india-news/p-chidambaram-gets-bail-in-inx-media-corruption-case-remains-in-enforcement-directorate-custody-2120636

HOT NEWS