தூக்குப் போடுவதற்கு முன் வீடியோ கால்! நடிகையின் அதிர்ச்சி முடிவு!

03 March 2020 சினிமா
padmajasuicide.jpg

சின்னத்திரை நடிகை பத்மஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், வீடியோ கால் ஒன்றினைப் பேசியிருப்பதனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சின்னத் திரையில் பல டிவி சீரியல்களில், துணை நடிகையாக நடித்து வருபவர் பத்மஜா. 23 வயது நிரம்பிய இவர், காதல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சில மாதங்களாக, காதல் கணவருக்கும், இவருக்கும் இடையில் வாக்குவாதங்களும், சண்டைகளும் ஏற்பட்டு உள்ளன.

இந்நிலையில், திருவொற்றியூரில் தனி வீடு எடுத்து பத்மஜா தங்கியிருந்துள்ளார். தன்னுடைய குழந்தையை, உறவினர் வீட்டில் வளர்க்கவும் கொடுத்துள்ளார். வாரம் ஒருமுறை, அக்குழந்தையின் பெற்றோர்கள் சென்று குழந்தையை சந்தித்துள்ளனர். இதனிடையே, பத்மஜாவின் வீட்டுக் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்த விளக்குகளும், அணையாமல் எரிந்து கொண்டே இருந்தன.

இதனால், சந்தேகமடைந்த வீட்டு ஓனர், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்துள்ளார். அப்பொழுது, வீட்டில் உள்ள மின்விசிறியில், பத்மஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது கண்டு, அப்பகுதி போலீசுக்குத் தகவல் அளித்துள்ளார். வீட்டிற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணின் உடலினை மீட்டு, சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரிக்கையில், பெங்களூரில் உள்ள தனது சகோதரிக்கு கடைசியாக, வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அதில், பணப் பிரச்சனை இருப்பதாகவும் கூறியிருக்கின்றார். கடன் தொல்லையின் காரணமாக, இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. தனிமையில் இருந்த காலத்தில், வேறு ஒரு உறவுக்கார இளைஞருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

HOT NEWS