ரம்ஜான் குழு வழிபாட்டிற்கு பாகிஸ்தான் அனுமதி! மாஸ் சூசைட் முயற்சி எச்சரிக்கை!

24 April 2020 அரசியல்
masjid.jpg

தற்பொழுது ரம்ஜான் நோன்பு காலம் ஆரம்பித்துள்ளதால், குழு வழிபாட்டிற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, முக்கால்வாசி நாடுகள் ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி வருகின்றன. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பாகிஸ்தானில் ஒரு சிலப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தற்பொழுது ரம்ஜான் பண்டிகைக்கான நோன்புக் காலம் ஆரம்பித்து உள்ளது. இதனால், இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய மசூதிகளுக்குச் செல்வர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், மசூதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப்படும் இந்த விழாவினை, மக்கள் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அதனடிப்படையில், மசூதிகளுக்கு சென்று, குழு வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என, அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு அந்நாட்டு செகரட்டரி ஜென்ரல் டாக்டர். குவைசிர் சஜித் கடுமையாகக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான, மெக்கா மற்றும் மதினாவிலேயே பொதுமக்கள் நடமாடத் தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு கூறியிருப்பது, பெரிய அளவில் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்றுக் கூறியிருக்கின்றார்.

அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இது குறித்து பேசுகையில், ரம்ஜான் வழிபாட்டினை வீட்டில் இருந்தபடியே அனைவரும் செய்யுங்கள். ஒருவேளை மசூதிக்குச் செல்ல நினைத்தால், கண்டிப்பாக செல்லலாம் எவ்விதத் தடையும் இல்லை. ஆனால், ஒரு சிலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதனைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், மே மாதத்தின் மத்தியப் பகுதியில் இந்த வைரஸ் தொற்று அதிகமாகலாம் எனக் கூறியுள்ளார்.

அந்நாட்டில் உள்ள மதக் குருக்களும், மதத் தலைவர்களும், பொதுமக்கள் வீட்டில் இருந்தே, வழிபாட்டினை மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர். பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளபடி, மசூதிக்கு குழந்தைகளும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களும் செல்லக் கூடாது. தரையில் விரித்துள்ள விரிப்பினை பயன்படுத்தக் கூடாது. அதனை எடுத்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை, மசூதிக்குச் செல்பவர்களுக்கு விதித்துள்ளது.

HOT NEWS