பாகிஸ்தான் நாட்டில் தொடர்ந்து நிலவி வருகின்ற கொரோனா பீதி காரணமாக, அங்கு அவசர நடவடிக்கையாக இங்கிலாந்து கொரோனா மருந்தானது அனுமதிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸிற்கு, பாகிஸ்தான் நாடும் தப்பிக்கவில்லை. அந்த நாட்டிலும் கணக்கெடுக்க முடியாத வகையில், இந்த வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. அந்நாட்டு அரசு அறிவித்துள்ள அறிவிப்பின் படி, ஜனவரி 17ம் தேதி வரை சுமார் 5,19,291 நபர்களிடம் கொரோனா தொற்று இருப்பதை கண்டறிந்து உள்ளனர். மேலும், இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்காக இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டு உள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசியினை, அவசர கால தேவைக்காக அனுமதிப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆசாத் உமர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நாட்டில் கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கோவாக்ஸ் கூட்டணியில் இருந்து நமக்கு 5 கோடி டோஸ்கள் இலவசமாக கிடைக்கும். நம் நாட்டில் உள்ள 70% நபர்களுக்கு இந்த மருந்தானது செலுத்தப்படும். அதாவது 7 கோடி பேருக்கு இந்த மருந்தானது வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார். அங்கு தற்பொழுது வரை 10,000 நபர்களுக்கும் அதிகமானோர் இந்த கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.