மும்பை தாக்குதலுக்கு பண உதவி செய்த 3 தீவிரவாதிகளுக்கு தண்டனை!

29 August 2020 அரசியல்
pakistanterrorist.jpg

மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு பண உதவி செய்த 3 தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு, மும்பை தாஜ் விடுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினரும் இறந்தனர். மொத்தமாக, 160 பேர் பலியாகி உள்ளனர். இது உலகளவில் கடும் கொந்தளிப்பினையும், இந்தியர்களிடையே கோபத்தினையும் ஏற்படுத்தியது. இதற்குக் காரணமாக இருந்த தீவிரவாதிகளுக்கு இந்திய அரசு, ஏற்கனவே தண்டனை வழங்கி விட்டது.

இந்த சூழ்நிலையில், அந்த தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்ததாக அமெரிக்காவும், இந்தியாவும் ஜூஐடி என்ற தீவிரவாதக் குழுவினைச் சேர்ந்த மூன்று பேரின் மீது குற்றம்சாட்டியது. இதனை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாலிக் ஜாபர், இக்பால் மற்றும் அப்துல் சலாம் உள்ளிட்டோருக்கு தற்பொழுது தண்டனை விதித்து உள்ளது.

அதன்படி மாலிக் ஜாபர் மற்றும் அப்துல் சலாம் ஆகியோருக்கு 16 ஆண்டுகளும், ஹபீஸ் ரஹ்துமானுக்கு ஒன்றரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள், ஹபீஸ் சயித்துடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS