பாகிஸ்தானில் இஸ்லாமியர்களும் பாதுகாப்பாக இல்லை! பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

11 September 2019 அரசியல்
baldevkumar.jpg

pic credit:twitter.com/ani

பாகிஸ்தானில் அமைச்சராக இருந்தவரின் பேச்சுத் தான் தற்பொழுது, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வைரலாக உள்ளது. தற்பொழுது பாகிஸ்தானின் பிரதமராக, இம்ரான் கான் உள்ளார். அவருடைய ஆட்சியில் தற்பொழுது உள்நாட்டில் ஒரு சிலக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

பால்தேவ் குமார் என்பவர், பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் வாழ்ந்து வருகின்றார். இவர், பாகிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர், தற்பொழுது பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரும், இந்துக்களும் தீவிரமாகத் தாக்கப்படுகின்றனர். அவர்களை பிரதமர் மோடி தான் காப்பாற்ற வேண்டும். இங்கு சிறுபான்மையினர் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் இந்தியாவில் அடைக்கலம் வேண்டுகின்றேன். நான் மீண்டும், பாகிஸ்தான் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டேன். தயவு செய்து உதவுங்கள் எனக் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு, இவர் இருக்கும் தொகுதியில் உள்ள எம்எல்ஏவைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இவர், 2018ம் ஆண்டு, நிரபராதி என நிரூபிக்கப்பட்டார். தற்பொழுது, அவர் இவ்வாறு அங்கு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எது எப்படியோ, நம்ம பிரதமர் பற்றி பாகிஸ்தானியரும் நல்ல விதத்திலேயே பேசுவது நல்லது தானே!

HOT NEWS