பாகிஸ்தானில் விமான விபத்து! பயணிகளின் நிலைமை கேள்விக்குறி!

22 May 2020 அரசியல்
karachiplanecrash.jpg

பாகிஸ்தானின் கராச்சி நகரில் விமான விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விமான விபத்தின் பொழுது, அந்த விமானத்தில் சுமார் 99 பயணிகளும், எட்டு விமான பணியாளர்களும் இருந்துள்ளனர்.

கராச்சி நகரில் ஏர்பஸ் ஏ320 என்ற விமானம், விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. லாகூரில் இருந்து கராச்சிக்கு வந்த இந்த விமானமானது, தரை இறங்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன், அதன் இரண்டு என்ஜின்களும் செயலிழந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த விமானத்தினை இயக்கிய விமானிகள், மெய்டே, மெய்டே, மெய்டே என அவசர ஒலியினை எழுப்பியுள்ளனர்.

கூட்ட நெரிசல் நிறைந்த கராச்சி நகரில், இந்த விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால், அந்தப் பகுதியில் வசித்து வந்த 25 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பாகிஸ்தான் செய்தி நிறுவனங்களின் தகவல்கள் படி, விபத்துக்குள்ளான இடத்தில் கடும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இது குறித்து பலரும் தங்களுடைய இறங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, தற்பொழுது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விமானத் துறை அதிகாரிகளும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

HOT NEWS