க்ரே லிஸ்ட்டில் தொடரும் பாகிஸ்தான்! தீவிரவாதத்தால் ஏற்பட்ட தலைவலி!

26 June 2020 அரசியல்
terrorist.jpg

தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து உதவி வரும் பாகிஸ்தான் தொடர்ந்து, க்ரே நிறப் பட்டியலில் இருப்பதாக, பாட்ப் அமைப்ப்பு அறிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாகவும், நீதியுதவி அளிப்பதாகவும் பாகிஸ்தான் மீது பல நாடுகள் புகார் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கை அமைப்பானது (FATF) தொடர்ந்து பாகிஸ்தானின் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளதாக, கடந்த ஆண்டு அறிவித்தது.

இதனால், பாகிஸ்தானிற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து, பாகிஸ்தானின் செயல்கள் திருப்திகரமானதாக இல்லை என்றுத் தெரிவித்த அந்த அமைப்பானது, பாகிஸ்தானை க்ரே நிறப் பட்டியலில் வைப்பதாக அறிவித்தது. தொடர்ந்து, மோசமான தீவிரவாத செயல்களுக்கு துணை புரிந்தால், கருப்பு நிறப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விடும். அவ்வாறு கருப்பு நிறப் பட்டியலுக்கு சென்றால், பாகிஸ்தானிற்கு பொருளாதார தடைகள் மற்றும் அதுசார்ந்த நெருக்கடிகள் ஏற்படும்.

தொடர்ந்து க்ரே நிறப் பட்டியலில் இருந்து வந்த பாகிஸ்தான், பலத் தீவிரவாதத் தலைவர்களையும், அமைப்புகளையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று FATF கூட்டம் வீடியோ கான்ப்ரன்ஸ் வழியாக நடைபெற்றது. அப்பொழுது, அந்த அமைப்புக் கூறுகையில், பாகிஸ்தானில் தொடர்ந்து 30,000 முதல் 40,000 தீவிரவாதிகள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக ஐநா கூறியதை சுட்டிக் காட்டியது.

மேலும், தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6500 தீவிரவாதிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தது. இதனால், பாகிஸ்தான் நாடானது, தொடர்ந்து க்ரே பட்டியலில் நீடிப்பதாக அறிவித்தது. இந்த கான்ப்ரன்சிங்கில் ஒரு முறை நாங்கள் பேச அனுமதிக்கப்படவில்லை என, பாகிஸ்தான் அரசாங்கம் குற்றம் சாட்டியது.

HOT NEWS