விபத்திற்கு முன் அழுத விமானி! என்ஜின் தோல்வி! 107 பேர் மரணம்!

24 May 2020 அரசியல்
karachiplanecrash.jpg

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் நடைபெற்ற விமான விபத்தில் சிக்கி, இதுவரை 107 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், தற்பொழுது ரம்ஜான் பண்டிகை களைகட்டத் தொடங்கி உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கொரோனா வைரஸால் ஒரு பக்கமும், விமான விபத்தால் மறு பக்கமும் பாகிஸ்தானிய மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ320 ஆனது, வந்துள்ளது.

தொடர்ந்து நான்கு முறை முயற்சித்தும் தரையிறங்க முடியாத காரணத்தினால், ஐந்தாவது முறையாக நடந்த முயற்சியில் விபத்து ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்த விமானத்தினை ஓட்டிய விமானிகள், விமானக் கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்பு கொள்ளும் பொழுது, மெய்டே, மெய்டே, மெய்டே என கதறி அழுதுள்ளனர்.

இருப்பினும், விமானத்தின் என்ஜின் முற்றிலும் செயலிழந்து விட்ட காரணத்தினால், விமானியின் கட்டுப்பாட்டில் அது இல்லை. இதனைத் தொடர்ந்து, கராச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகளில், இந்த விமானம் நுழைந்துவிட்டது.

அங்கிருந்த வீடுகளில் மோதி, தீப்பிடித்து எரிந்தது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 99 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் என மொத்தம் 107 பேர் பலியானதாக அரசு அறிவித்துள்ளது.

HOT NEWS