இந்தியா மீது பாகிஸ்தான் குண்டு வீசித் தாக்குதல்! எல்லையில் பதற்றம்!

11 June 2020 அரசியல்
warsoldiers.jpg

நேற்று இரவு இந்தியாவின் கிராமங்கள் மீது, பாகிஸ்தான் இராணுவம் ஷெல் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதால், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உண்டாகி உள்ளது.

இந்தியாவினை கொரோனா வைரஸ் பரவி உள்ள இந்த நேரத்தில், பாகிஸ்தான் இராணுவமும் அந்நாட்டுத் தீவிரவாதிகளும் சீண்டிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ஜூன் பத்தாம் தேதி இரவு, காஷ்மீர் பகுதியில் உள்ள ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மீது, பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி, சக்தி வாய்ந்த ஷெல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி உள்ளது.

மொத்தம் ஆறு கிராமங்களில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இந்திய இராணும் தெரிவித்துள்ளத் தகவலின் படி, இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மீது, பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. சக்தி வாய்ந்த ஷெல் ஏவுகணைகளை இந்த தாக்குதலுக்காகப் பயன்படுத்தி உள்ளது.

தாக்குதல் நடைபெறுவதை அறிந்த மக்கள், உடனடியாகப் பதுங்கு குழிகளுக்குள் சென்று பதுங்குவிட்டனர். இதனால், பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளன. அதுமட்டுமின்றி, பல கால்நடைகளும் உயிரிழந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது. இதற்கு விரைவில் இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS