சீனாவிற்கு ஜால்ரா அடிக்கும் பாகிஸ்தான்! கடுப்பில் இந்தியர்கள்!

29 May 2020 அரசியல்
imrankhanspeech.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், மோதல் உருவாகி உள்ள நிலையில், முதன்முறையாக சீனாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சனை உருவாகி உள்ளது. இதனால், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் போர் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மிகவும் மோசமானப் போருக்குத் தயாராகுங்கள் என, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேபாள இராணுவமும், அந்நாட்டு அரசாங்கமும் சீனாவிற்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் பேசி வருகின்றன. இந்நிலையில், தற்பொழுது பாகிஸ்தான் நாட்டின் அதிபரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தங்களுடையக் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறுகையில், இந்துத்துவாவினை கையாளும் மோடியின் அரசானது, சர்வாதிகார அரசியல், நாசிப் படையினைப் போன்ற செயல்பாடு காரணமாக, இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குடியுரிமைச் சட்டத்தின் மூலம், வங்கதேசத்திற்கு எதிராகவும், நேபாளத்திற்கு அருகில் இராணுவக் கட்டுமானத்தின் காரணமாக நேபாளம் தற்பொழுது சீனாவிற்கும் எதிரியாக மாறியுள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, இந்த எல்லைப் பிரச்சனையை சீனா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நினைத்தது. அதனை இந்தியாப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து, தன்னுடைய இராணுவக் கட்டுமானப் பணியினை நேபாளம் அருகில் தொடர்ந்தது. இதுவே, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம்.

பாகிஸ்தானிற்கு எதிராக, ஆப்கானிஸ்தானை தூண்டிவிட நினைத்து தோல்வி அடைந்தது. பின்னர் பலுசிஸ்தான் விஷயத்தில் பிரச்சனையை உருவாக்க நினைத்து தோல்வி அடைந்தது. இது போலவே, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தினையும் நீக்கியது. உலக நாடுகள் அனைத்துமே, தற்பொழுது இந்தியாவினைக் கேள்விக் கேட்கும் நேரம் வந்துவிட்டது. சீனாவுடன் ஏற்பட்ட மோதலால் தற்பொழுது பெரிய பிரச்சனையே உருவாக உள்ளது.

இது இந்தியாவிற்கு மட்டுமின்றி, ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது என அவர் தன்னுடையக் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS