போர் என்றால், பாகிஸ்தான் தோற்கும்! இம்ரான் கான் பேச்சு! ஆனால் போருக்கு வாய்ப்புள்ளது!

16 September 2019 அரசியல்
imrankhan.jpg

இந்தியாவுடன் பழைய விதமாகப் போர் ஏற்பட்டால், கண்டிப்பாக பாகிஸ்தான் தோல்வியைத் தழுவும் என, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் கூறியுள்ளார். இது தற்பொழுது அந்நாட்டு தலைவர்களை, கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

காஷ்மீர் பிரச்சனை ஓரளவுக்கு ஓய்ந்துவிட்டாலும், பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லையே என, பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்து வருகின்றது. ஒரு பக்கம் போர் பதற்றத்தை அதிகரிக்கும் விதத்தில், பேசி வருகின்றது. இன்னொரு பக்கம், உலக சபையில் நீதி கிடைக்கும் எனவும் கூறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் திரு. இம்ரான் கான் பேசுகையில், இந்தியாவினைப் பழைய மாதிரி போரில் சந்தித்தால், பாகிஸ்தானிற்கேப் பெரிய இழப்பு ஏற்படும் எனவும், எனவே இப்பிரச்சனையை புதிய விதத்தில் கையாள வேண்டும் எனவும் பேசியுள்ளார். மேலும், அணு ஆயுதப் போர் வந்தால், கண்டிப்பாக, இரு நாட்டு மக்களுமே பாதிப்பினை அடைவர் என்றார். மேலும், இந்தியாவுடனான போருக்கு, அதிக வாய்ப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அல் ஜசிரா என்ற செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, இம்ரான் கான், இந்தியாவுடனான போருக்கு, அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்படைவர் எனவும் பேசினார். மேலும் போர் என்று வந்துவிட்டால், பாகிஸ்தான் எக்காரணம் கொண்டு பின்வாங்காது என்றும், தன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரைப் போராடும் எனவும் கூறியுள்ளார். பாகிஸ்தன் சுதந்திரத்திற்காக எப்படி போராடியது அப்படியே, போரிலும் போராடும் என்று கூறியுள்ளார்.

HOT NEWS