பாகிஸ்தானைக் கலக்கும் 11 வயது சிறுவன்

31 March 2019 அரசியல்
power-star-srinivasan.jpg

ஹமாது சஃபி எனும் 11 வயது சிறுவன் இன்று பாகிஸ்தானில் உள்ள அனைவராலும் பேசப்படும் ஒரு மனிதராக காணப்படுகிறான். பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் இவருடையப் பேச்சைக் கேட்க பல நூறு மாணவர்கள் அமைதியாக அமர்ந்து கவனிக்கின்றனர். சிறந்த பேச்சாற்றல் கொண்ட இந்த சிறுவன், தன்னை 'மோட்டிவேட்டராக' (motivator) அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

இவர் வயதில், அனைவருமே திரைப்படத்தைப் பார்த்து அவர்களையே உண்மையான ஹீரோக்கள் என்போம். ஆனால், இவரோ பில் கேட்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் உண்மையான ஹீரோ என்று கூறி தன்னுடையப் பேச்சை ஆரம்பிக்கிறார்.

இவர் தனியாக யூடியூப் சேனலையும் வைத்துள்ளார். இவருடையப் பேச்சைக் கேட்டப் பலரும் இவரின் அறிவைக் கண்டு வியக்கின்றனர். இவருடைய ஆசிரியர்களே இவரின் பிரதான இரசிகர்கள் என்றால், இவர் எவ்வளவு மதிப்புமிக்கவராக பார்க்கப்படுகிறார் என்பதை, நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

மலாலாவைப் போன்று இவருக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. இதற்காகவே, இவர் படிக்கும் பள்ளிக்கு, துப்பாக்கி ஏந்தியப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் இவருடையத் திறமையைக் கண்டு ஒவ்வொரு வாரமும் இவரைப் பேச அழைக்கிறது. இவருடைய தந்தை அப்துல் ரஹீம் கான் ஒரு பணக்காரர் ஆவார். இவர் தன்னுடையக் குழந்தையைப் பற்றிப் பெருமையாக பேசுகிறார். இவர் (சஃபி) இறைவன் எனக்களித்த வரம் என்றும், இவர் சாதாரணக் குழந்தை இல்லையென்றும் கூறுகிறார்.

HOT NEWS