பரபரப்பாய் நடந்து முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு! கார், பசுமாடுகள் பரிசு!

16 January 2020 அரசியல்
jallikkatu1.jpg

இன்று மாட்டுப் பொங்கல் திருவிழாவானது, வெகு விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மதுரையில் உள்ள பாலமேடுப் பகுதியில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில், சுமார் 675க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காலை 8.30 மணியளவில், ஆட்சியர், அமைச்சர் மற்றும் ஐஜி முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர். பின்னர், ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம், சுழற்சி முறையில் வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் போட்டியில் களம் கண்ட, அனைத்து காளைகளுக்கும் பிளாஸ்டிக் சேர் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு, தங்க நாணயம், வெள்ளி நாணயம், அண்டா உட்பட பல பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

முதலில் கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. பின்னர், வரிசையாக மாடுகள் அவிழ்த்துப் பட்டது. பல காளைகள், வீரர்களை தொடவிடாமல் துள்ளி குதித்து விளையாடின. அதனை பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். காளையர்களும், விடாமல் விளையாடி பரிசுகளை அள்ளினர்.

சரியாக மாலை 5 மணி அளவில், ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம், 676 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதில், சிறந்த காளைக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள காங்கேயம் பசுவும், கன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும், 16 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு, மாருதி சுசுக்கி இக்னிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய ராஜா என்பவருக்கு, டிவிஎஸ் விக்டர் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு பெற்ற கார்த்தி என்பவர் 10 காளைகளை அடக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை (17-01-2020) காலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

HOT NEWS