இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், பான் கார்டினை ஆதர் கார்டுடன் இணைக்கும் அவகாசத்தினை நீட்டித்து, வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைவரும் தங்களுடையப் பான் கார்டின் எண்ணினை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என, இந்திய வருமானவரித்துறை உத்தரவிட்டது. இதற்காக காலக் கெடுவும் அது விதித்தது. இந்த காலக் கெடு முடிந்தப் பின்னரும், நாட்டின் 80% அதிகமானோர் தன்னுடைய பான் கார்டினை ஆதார் எண்ணுடன் இணைக்கவே இல்லை. இதனிடையே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காரணத்தால், மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
2019-2020க்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தினை, நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்திருந்த நிலையில், புதிதாக டிடிஎஸ் மற்றும் வரிசேமிப்பு முதலீட்டிற்கான தேதியினையும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. அதே போல், பான் கார்டுடன், ஆதார் கார்டினை இணைக்கும் கால அவகாசமானது, மார்ச் 31, 2021 எனவும் அது குறிப்பிட்டு உள்ளது.